சின்னகடை தெருவைச் சேர்ந்தவர் ஜெகன். தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர். நடிகர் விஜய் ரசிகர் மன்றத் தலைவராக உள்ளார். இவருக்கும், தம்பி சிமன்சன் என்பவருக்கும் இடையே வீட்டுச் சொத்தைப் பிரித்துக் கொள்வது சம்பந்தமாகத் தகராறு இருந்து வந்ததுள்ளது. இப்பிரச்னை முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஜெகன் தம்பியைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சிமன்சனின் தொடைப்பகுதியில் குண்டு பாய்ந்ததால் அவர் உயிரிழந்தார்.
விரைந்து வந்து காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஜெகன் மற்றும் அவனுக்கு உதவியாக இருந்த நான்கு பேரைத் தேடி வந்தனர். இந்நிலையில் ஜெகனும், அவரது கூட்டாளிகளையும் திருவனந்தபுரத்தில் கைது செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.