ETV Bharat / city

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா தொடக்கம் - தசரா பண்டிகை

குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்துடன் தொடங்கிய குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா

author img

By

Published : Sep 26, 2022, 2:23 PM IST

தூத்துக்குடி: மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா வெகு விமர்சையாக பத்து நாட்கள் கொண்டாடப்படும். இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம் தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டு தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று(செப். 26) தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கொடிபட்டமானது யானை மேல் வைத்து வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அதனை தொடர்ந்து 9 மணிக்கு மேல் கோயில் உள் பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கொடியேற்றத்துடன் தொடங்கிய குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா

கொடியேற்றத்தை தொடர்ந்து, பல்வேறு நாட்களாக விரதம் இருக்கும் பக்தர்கள் தங்களது கைகளில் மஞ்சள் கயிற்றாலான திருக்காப்பு அணிந்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிசாசூரசம்ஹாரம், 10ஆம் திருநாளான அக்டோபர் 5ஆம் தேதி (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

இந்தக் கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு சுமார் 600 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கோயில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 48 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: கண்ணை மிளிரும் சப்பரங்களில் அம்மன் வீதி உலா; நெல்லையில் களைகட்டும் தசரா பண்டிகை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.