ETV Bharat / city

திருச்செந்தூர் அருகே வீட்டில் சடலமாக கிடந்த பெண்.. போலீசார் விசாரணை - திருச்செந்தூர் அருகே உடன்குடி புதுமனை

திருச்செந்தூர் அருகே உடன்குடி புதுமனையில் பூட்டியிருந்த வீட்டில் பெண் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த சம்பவம் குறித்து குலசேகரன் பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 17, 2022, 12:54 PM IST

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உடன்குடி புதுமனை, பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சுயம்பு என்பவரின் மனைவி சுயம்பு கனி. இவர்களின் 4 குழந்தைகள் திருமணம் ஆகி சென்னையில் உள்ள நிலையில், கணவன் மனைவி ஆகிய இருவரும் உடன்குடியில் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், சுயம்பு கனி நேற்று (ஆக.16) முழுவதும் வீட்டை விட்டு வெளியே வராமல், வீடு பூட்டிய நிலையில் காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சுயம்பு கனியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கவே சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் குலசேகரப்பட்டினம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு சென்ற போலீசார் வீட்டின் பூட்டை உடைத்துப் பார்த்தபோது சுயம்பு கனி, ரத்த வெள்ளத்தில் அரை நிர்வாண நிலையில் பிணமாகக் கிடந்தார். இதனைத்தொடர்ந்து, நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? இல்லை.. வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குடும்ப தகராறு...மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.