தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகராட்சிக்குட்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரிச் சந்தை செயல்பட்டு வருகிறது. இச்சந்தையில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் பொதுமக்களும், வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
பாலியல் தொழிலாளியை நம்பிச் சென்றவரிடம் பணம் பறித்த கும்பல்!
அந்த புகாரைத் தொடர்ந்து நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் இன்று தொடங்கியது. ஆனால் அதற்கு இடையூறாக வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு நகராட்சி நிர்வாகம் ஒதுக்கியுள்ள சிறிய இடத்தில் காய்கறிகளை வைத்து வியாபாரம் செய்ய முடியாது என்றும், முறைப்படி அனைத்து வியாபாரிகளை அழைத்துப் பேசி முடிவெடுத்த பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வியாபாரிகள், கூறினர்.
மலையாள ரீமேக் படத்திற்காக முரட்டு அவதாரம் எடுக்கும் ஆர்.கே. சுரேஷ்
இதையடுத்து காவல் துறையினர் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஜனவரி 27ஆம் தேதி ஆக்கிரமிப்புகளை வியாபாரிகள் அகற்றிக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் நகராட்சி அலுவலர்கள்கள் அகற்றிவிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மக்கள் அதிகம் கூடும் காய்கறிச் சந்தையில் நடந்த இந்நிகழ்வினால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.