ETV Bharat / city

"ககன்யா" திட்டம் மூலம் விண்ணுக்குச் செல்லும் மனிதன் - மகேந்திரகிரி மைய இயக்குநர் உறுதி! - kakanya will launch in 2022

தூத்துக்குடி: விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியான "ககன்யா" திட்டத்தை 2022ஆம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிட்டிருப்பதாக மகேந்திரகிரி மைய திட்ட இயக்குநர் மூக்கையா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விண்வெளி கண்காட்சி
author img

By

Published : Oct 9, 2019, 6:19 PM IST

உலக விண்வெளி வார விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி உந்தும் வளாகம் சார்பில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் விண்வெளி கண்காட்சி தொடங்கியது. விண்வெளி கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கல்லூரிச் செயலாளர் சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் வீரபாகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி முகமை திட்ட இயக்குநர் மூக்கையா, இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குநர் ஆர்.எம். வாசகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பேசினர்.

இதில், மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய திட்ட இயக்குநர் மூக்கையா பேசுகையில், “கேட் வே ஆஃப் த ஸ்டார்" என்ற தலைப்பில் விண்வெளி மண்டலங்கள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ஆராய்ச்சியின்படி விண்ணில் நிலவைத் தவிர நான்கு இடங்களில் மனிதன் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதற்கேற்றபடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள விண்வெளித்துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மகேந்திரகிரி மைய திட்ட இயக்குநர் மூக்கையா பேட்டி

வருங்காலங்களில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத வகையில் மண்ணெண்ணெயில் இயங்கும் வகையில் ஏவுகணை இயந்திரங்கள், வடிவமைப்புகள் செய்யச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடுத்தகட்டமாக 2022 ஆகஸ்டுக்குள் இந்திய விண்வெளி மையத்திலிருந்து மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன” என்றார்.

விண்வெளி கண்காட்சியில் இஸ்ரோ விண்வெளி மைய மாதிரி ஏவுகணைகள், பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மாதிரிகள், ஜிஎஸ்எல்வி ஏவுகணை இயந்திரத்தின் செயல்பாட்டை விளக்கும் வகையிலான மாதிரி, மற்றும் வருங்கால திட்டங்கள், விண்வெளி குறித்த அரிய தகவல்கள் ஆராய்ச்சி நிலைகள், இஸ்ரோ விண்வெளி மைய சாதனைகள் ஆகியவை விளக்கப் படங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்த கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறும். இந்த விண்வெளி கண்காட்சியைத் தூத்துக்குடி மாவட்ட மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த, 17 ஆயிரம் மாணவ - மாணவிகள் கண்டு களிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Intro:விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியான "ககன்யா" திட்டத்தை 2022 ஆக்ஸ்டுக்குள் முடிக்க திட்டம் - மகேந்திரகிரி இஸ்ரோ மைய திட்ட இயக்குநர் மூக்கையா பேட்டி

Body:

தூத்துக்குடி

உலக விண்வெளி வார விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி உந்தும் வளாகம் சார்பில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் விண்வெளி கண்காட்சி தொடங்கியது.

விண்வெளி கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் வீரபாகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி முகமை திட்ட இயக்குனர் மூக்கையா, இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர் ஆர்எம் வாசகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

இதில், மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய திட்ட இயக்குனர் மூக்கையா பேசுகையில்
"கேட் வே ஆஃப் த ஸ்டார்" என்ற தலைப்பில் விண்வெளி மண்டலங்களை பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளபட உள்ளன. இந்த ஆராய்ச்சியின்படி விண்ணில் நிலவை தவிர நான்கு இடங்களில் மனிதன் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளதாக அராய்ச்சியாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதற்கேற்றபடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள விண்வெளித்துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நான்கு இடங்களுக்கு செல்வதற்கு நிலவிலிருந்து எரிபொருள் நிரப்பி செல்லும் வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்பட்ட வேண்டும். மாணவ-மாணவிகள் வரும் காலங்களில் உலக அளவில் பல நாடுகளின் செயற்கைகோள்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வருங்காலங்களில் சுற்றுசூழல் மாசு ஏற்படுத்தாத வகையில் மண்னணெண்ணெயில் இயங்கும் வகையில் ராக்கெட் எந்திரங்கள் வடிவமைப்புகள் செய்ய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்தக்கட்டமாக 2022 ஆகஸ்டுக்குள் இந்திய விண்வெளி மையத்திலிருந்து மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.

இந்திய விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குனர் ஆர்.எம்.வாசகம்
பேசுகையில்,
நீர்மூழ்கிக்கப்பல், போர் விமானம், துப்பாக்கி உள்பட பாதுகாப்பு துறை சார்ந்த விஷயங்களில் இன்னமும் தன்னிறைவு அடையவில்லை என்றார்.

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் எடுப்பது தொடர்பாக ஆய்வறிக்கைகள் கோரப்பட்டிருந்தது. அதற்கான பணிகள் நிறைவுபெற்று அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டதும் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்படும் என்றார்.

விண்வெளி கண்காட்சியில் இஸ்ரோ விண்வெளி மைய மாதிரி ராக்கெட்டுகள், பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மாதிரிகள், ஜிஎஸ்எல்வி ராக்கெட் எந்திரத்தின் செயல்பாட்டை விளக்கும் வகையிலான மாதிரி, மற்றும் வருங்கால திட்டங்கள், விண்வெளி குறித்த அரிய தகவல்கள் ஆராய்ச்சி நிலைகள் இஸ்ரோ விண்வெளி மைய சாதனைகள் ஆகியவை விளக்கப் படங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்த கண்காட்சி இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும். இந்த விண்வெளி கண்காட்சியை தூத்துக்குடி மாவட்ட மற்றும் மாவட்டத்தை சேர்ந்த 17 ஆயிரம் மாணவ-மாணவிகள் கண்டு களிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.