ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி இந்திய கடற்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தைக் கொண்டாடும் வகையில் டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் கடற்படை போர்க்கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருவது வழக்கம்.
இந்தக்கப்பலை மாணவ, மாணவிகள் மட்டும் மதியம் 1.00 மணி முதல் 5.00 மணி வரையிலும் பார்வையிடலாம். 15-ஆம் தேதி உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளும், பொது மக்களுக்கும் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வ.உ.சி. துறைமுகத்தில் இந்திய கடற்படையின் போர்க்கப்பலை பார்வையிட அனுமதி உண்டு.
போர்க்கப்பலை பார்வையிடவரும் பள்ளி மாணவ, மணவிகளும், பொதுமக்களும் கடற்படை அதிகாரிகளிடம் கடற்படையின் வாழ்க்கையைப் பற்றி கலந்துரையாடி அறிந்து கொள்ளலாம். கப்பலை பார்வையிட வருபவர்களுக்கு தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தின் பிரதான வாசல் வழியாக அனுமதி தரப்படும்.
இதையும் படிங்க: குளச்சலில் அடையாளம் தெரியாத கப்பல் யாருடையது? - விசாரணையில் வெளியான தகவல்