தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பீச் ரோடு சார் ஆட்சியர் அலுவலகத்தின் வடபுறம் ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியர்களுக்கு எதிராக செயல்பட்ட ஆஷ் துரை மணிமண்டபம் உள்ளது.
இந்த மணிமண்டபம் மாநகராட்சி சார்பில் புனரமைக்கப்படுவதை நிறுத்தக்கோரி இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் தலைமையில், இந்து முன்னணியினர் தூத்துக்குடி பழைய மாநகராட்சிப்பகுதியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாநகராட்சி ஆணையரிடம் பாதை யாத்திரையாக சென்று மனு கொடுக்க செல்ல முயன்றனர். அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் பாபி தலைமையிலான காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
உள்ளே செல்ல அனுமதிக்காததால் தரையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். பின்னர், பேச்சுவார்த்தைக்குப் பின் தனியார் பேருந்து மூலம் தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீயுடம் அவர்கள் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் விளம்பரப்பதாகையில் பிரதமர் படம் ஒட்டிய பாஜக Vs கறுப்பு மை ஊற்றி எதிர்த்த திகவினர்!