ETV Bharat / city

பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் உடல்! - tuticorin crime

தருவைக்குளம் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் உடல் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Half burnt Body of Woman Found Near thoothukudi

author img

By

Published : Apr 24, 2021, 8:27 AM IST

தூத்துக்குடி: தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துரைசாமிபுரம் காட்டுப் பகுதியில் சுமார் 25 முதல் 35 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத பெண் உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரும் சம்பவ இடத்திற்கு சென்று உடலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இறந்தவர் இடது கால் சுண்டு விரல்; அதன் அருகில் உள்ள விரல் முன்னும் பின்னுமாக இருந்தது. காலில் கொலுசு, கால் விரலில் மெட்டி காணப்பட்டது. கழுத்தில் தாலி சங்கிலி, இரட்டைச் சடை சங்கிலி அணிந்துள்ளார். கறுப்பு நிற முக கவசம், சிறிய சாவியும் இருந்ததுள்ளது.

இவர் யார்? எப்படி கொல்லப்பட்டார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தனிப்படை அமைத்து காவல் துறையினர் துரித விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மனைவியை கொலை செய்த கணவர் போலீசில் சரண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.