கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜி.வி. மார்க்கண்டேயன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊர்வலமாக வந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அபுல்காசிமிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது விளாத்திகுளம் திமுக நகரச் செயலாளர் வேலுச்சாமி உடனிருந்தனர்.
பின்னர் விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜி.வி. மார்க்கண்டேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில் 'டெல்லியில் இருப்பவர்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது தொடை நடுங்கிகளாக காலில் விழுந்து, அடிமைகளாக வாழ்பவர்களை, எந்த மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நம்மை அடிமைகளாக வைத்து இருக்கின்ற இந்த பழனிசாமியின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழ்நாட்டிலேயே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தொகுதியாக விளாத்திகுளம் தொகுதி இருக்கும்.
சரித்திரத்தில் மாவீரர்கள், பெரியகோட்டை என்று சொல்பவர்கள் எல்லாம் சுக்குநூறாக உடைந்து இருக்கிறார்கள். இது வெறும் தகரக் கோட்டை தான், இதை துடைத்தெடுக்கும் வல்லமை படைத்தவர்கள் இந்த மக்கள். நான் இந்தத் தொகுதியில் ஒரு லட்சத்து ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: டிடிவி தினகரனுக்கு டெபாசிட் கிடைக்காது - அமைச்சர் கடம்பூர் ராஜூ