தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், மீனவர் இசக்கிமுத்து தலைமையில் நேற்று (பிப்.22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மீனவ சமுதாய மக்களுக்கு வலிவலை மீன்பிடி தளம் அமைத்துத் தரக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மீனவர் இசக்கிமுத்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"திரேஸ்புரம் விவேகானந்தர் நகர் பகுதியில் மீன்பிடி தளம் உள்ளது. ஆனால் இப்பகுதியில் வலிவலை எனப்படும் மீன்பிடி இறங்கு தளத்தை அமைப்பதற்கு மீனவர்கள் பல கட்டமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் மாவட்ட எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.
மீனவர்களின் தொடர் கோரிக்கையை அடுத்து விவேகானந்தா நகர் பகுதியில் டி-ஜெட்டி, வலிவலை படகு தளம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே மீனவர்களின் நலன் கருதி திரேஸ்புரம் விவேகானந்தர் நகர் பகுதியில் டி-ஜெட்டி, வலிவலை இறங்குதளம் அமைத்து தர வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை: மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தூய்மைப் பணியாளர்கள்!