தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு அழுகிப்போன பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்ககோரி கோஷம் எழுப்பினர்.
![தூத்துக்குடியில் பயிர்களுக்கு நோய் தாக்குதல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-05-kovilpatti-farmers-agitation-vis-script-7204870_21122020192912_2112f_1608559152_296.jpg)
பின்னர் கோட்டாட்சியர் விஜயாவை நேரில் சந்தித்து தங்களுடைய கோரிக்கை மனுவினை வழங்கினர். அந்த மனுவில், "இந்த ஆண்டு பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் வெள்ளை நோயால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகிய வட்டங்களில் இந்த பாதிப்பு அதிகளவில் உள்ளது. எனவே, நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டு பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி 8 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு