ETV Bharat / city

திமுகவுக்குச் சரியான பாடத்தை மக்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி - urban local body election campaign

தூத்துக்குடியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு மக்கள் வயிற்றில் அடிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், மக்கள் திமுகவிற்குச் சரியான பாடம் கற்றுக்கொடுக்க வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Feb 8, 2022, 10:34 AM IST

தூத்துக்குடி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி நேற்று பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர்கள் கடம்பூர் ராஜு எம்எல்ஏ, எஸ்பி சண்முகநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

அதிமுகவினர் வெற்றிபெற வேண்டும்

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும். மாநகராட்சிகளில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் மேயராக அமர வேண்டும்.

இதுபோல் நகராட்சி, பேரூராட்சிகளில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களே வெற்றிபெற வேண்டும். அதற்கு இரவு பகல் பாராது கழகத் தொண்டர்கள் உழைக்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் நடைபெற்ற கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றிபெற்றதை அறிவோம். அதே வெற்றியை இந்தத் தேர்தலிலும் அதிமுகவுக்கு மக்கள் தர வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். இந்த உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலமாக திமுகவுக்குச் சரியான பாடத்தை மக்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.

மக்களுக்கு நன்மை இல்லை

தற்போது நடைபெற்றுவரும் திமுக ஆட்சியினால் எந்த நன்மையும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்கவில்லை. புதிதாக எந்தத் திட்டத்தையும் திமுக அரசு மக்களுக்காகக் கொண்டுவரவில்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கி கொண்டுவந்த திட்டங்களைத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் இப்போது தொடங்கிவைக்கிறார். அவர், ஆய்வுப் பணி என்னும் பெயரில் நடைபயணம் போவதையும், 'டீ' குடிக்கச் செல்வதும், உடற்பயிற்சி கூடத்திற்குப் போவதையும் பார்க்கவா மக்கள் வாக்களித்தனர். இதன்மூலமாக அவர் வீண் விளம்பரம் மட்டுமே அவர் தேடிக்கொள்கிறார்.

இதை எல்லாம் காட்டி மக்களை ஏமாற்ற முடியாது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவே மக்கள் திமுகவுக்கு வாக்களித்தனர். தேர்தல் சமயத்தில் திமுகவினர் 525 வாக்குறுதிகளை கொடுத்தனர். அதில் 200ஐ நிறைவேற்றியதாகச் சொல்வது அனைத்தும் பச்சை பொய்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை

நிறைவேற்றப்படாத வாக்குறுதி

குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என உறுதி கூறியதிலிருந்து, கல்விக்கடன் தள்ளுபடி, முதியோர் உதவித் தொகை உயர்த்தி வழங்குதல் போன்றவற்றை நிறைவேற்றவில்லை.

நகைக்கடன் தள்ளுபடி என்று சொல்லி 35 லட்சம் பேரை ஏமாற்றியுள்ளனர். திமுக, ஆட்சிக்கு வரும்முன் ஒரு பேச்சு, வந்த பின்பு ஒரு பேச்சு. இதுதான் திமுக நிலைப்பாடு. மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையைக் குறைத்தும், தமிழ்நாட்டில் விலையைக் குறைக்க திமுக அரசு மறுத்துவிட்டது.

மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் தொகுப்பு பொருள்கள் யாருக்கும் முறையாக வழங்கப்படவில்லை. தரமற்ற பொருள்களை வழங்கி மக்களின் வயிற்றில் அடித்த அரசாங்கம் திமுக.

திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே கிடையாது. கொள்ளையடிப்பதற்காகவே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால், அதிமுக ஆட்சியில் மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம். எனவே, மீண்டும் அதிமுக ஆட்சி மலர மக்கள் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கழக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: முத்து நகரத்தின் தேர்தல் யுத்தம்: காலையில் எடப்பாடி பழனிசாமி, மாலையில் கனிமொழி பரப்புரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.