நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தேமுதிக கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இன்று காலை தூத்துக்குடியில் இருந்து சென்னை புறப்படுவதற்காக விமான நிலையம் வந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதி இடைத் தேர்தல்களிலும் அதிமுக கூட்டணிக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. நிச்சயமாக இந்த தேர்தலில் எங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவார்கள்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் என்பதால் எதிர்கருத்துக்களை கூறி வருகிறார். குறை கூறுவதுதான் தற்போது அரசியல் என்ற நிலையாகிவிட்டது. எதிர்க்கட்சி தலைவர் என்பதால் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்பது அல்ல என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க:
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் வேட்பாளர் பெயரை அறிவிப்போம் - பிரேமலதா