திரைப்பட இயக்குநரும், சமூக நல ஆர்வலருமான இயக்குனர் கௌதமன் தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தூத்துக்குடியில் மண்வளமும், மக்கள் வளமும் பாதுகாப்பதற்காக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட திட்டமிட்டுள்ளேன். 'தமிழ் பேரரசு கட்சி' சார்பில் நான் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறேன்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இன்னும் தீர்வு ஏற்படவில்லை. நாட்டில் இருக்கும் ஏறக்குறைய 99 சதவீத கட்சிகள் ஸ்டெர்லைட் ஆலையிடம் பணம் வாங்கியுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது எங்களது கட்சியின் முக்கிய கொள்கையாக இருக்கும்.
பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையைவிட வேறு தண்டனை கிடையாது. சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் காணாமல் போன செய்தியை விட, சிபிசிஐடி போலீசார் இன்று அவர் காணவில்லை என்று போஸ்டர் ஒட்டி இருப்பதே பெருத்த துயரம் என்று தெரிவித்தார்.