சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. 188 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்துவருகிறது.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் முத்துநகர் கடற்கரையில் ராட்சச பலூன்களை பறக்கவிட்டு பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட பிரம்மாணட சதுரங்க மேடையில் சதுரங்கம் விளையாடப்பட்டது.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா!!