மத்தியக் குழுவைச் சேர்ந்த பயிர் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி, எண்ணெய் வித்துக்கள் மேம்பாட்டு இயக்குனர் மனோகரன், மத்திய நிதித்துறையின் செலவீனங்கள் பிரிவின் இணை இயக்குனர் மகேஷ்குமார், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை இயக்குனர் ஜெகத்நாதன் ஆகியோர் தூத்துக்குடி வந்தனர்.
இவர்கள் கோவில்பட்டி தாலுகாவில் உள்ள இடைசெவல், எட்டயபுரம் தாலுகாவில் உள்ள குமாரகிரி புதூர், தலைகாட்டு புரம், விளாத்திகுளம் தாலுகாவில் கமலாபுரம், ஆற்றங்கரை ஆகிய கிராமத்தில் மழையால் சேதமடைந்த பயிர்கள் பாதிப்பை பார்வையிட்டு சேதங்களை மதிப்பீடு செய்தனர். ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: சக்ரா பட வெளியீடு விவகாரம் - மத்தியஸ்தரை நியமித்து நீதிமன்றம் உத்தரவு