ETV Bharat / city

கடல் சீற்றம் - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! - மீனவர்கள்

தூத்துக்குடி: கடல் சீற்றம் காரணமாக 3 நாள்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

sea
sea
author img

By

Published : Oct 10, 2020, 10:30 AM IST

கரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆறு மாதங்களாகவே விசைப்படகு மீன்பிடி தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் 13 கடற்கரை மாவட்டங்களிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். பின்னர் அத்தியாவசிய பணிகளுக்கு அரசு விலக்களித்து உத்தரவிட்டதை தொடர்ந்து, கட்டுப்பாடுகளுடன் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீன்பிடி தொழிலுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

இந்நிலையில், மன்னார் வளைகுடா பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, ஆழ்கடல் சீற்றத்துடன் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், ஆகவே, இன்று முதல் மூன்று நாள்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடல் சீற்றம் - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

இதைத்தொடர்ந்து, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள், மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக, தூத்துக்குடி மாவட்ட மீனவ கிராமங்களில் ஏராளமான விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை.

இதையும் படிங்க: சிதம்பர நகர் சந்தை வளாகத்திற்கு முன்னறிவிப்பின்றி சீல்: வியாபாரிகள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.