ETV Bharat / city

கடம்பூர் ராஜூ கொள்ளையடித்த பணத்தில் ஒரு ஊரையே வாங்கலாம்! - கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: அமைச்சர் கடம்பூர் ராஜூ கொள்ளையடித்து சேர்த்து வைத்துள்ள பணத்தில் ஒரு ஊரையே வாங்கலாம் என பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

stalin
stalin
author img

By

Published : Mar 22, 2021, 3:57 PM IST

Updated : Mar 22, 2021, 4:30 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், திருச்செந்தூர் ஆகிய தொகுதிகளில் திமுகவும், காங்கிரஸ் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும், கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்டார். தூத்துக்குடி சிதம்பர நகர் நிறுத்தம் அருகே அவர் பேசும்போது, “தூத்துக்குடியை மாநகராட்சியாக்கியது, தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் இதுபோன்ற எண்ணற்ற சாதனைகளை என்னால் சொல்ல முடியும்.

ஆனால், தூத்துக்குடிக்கு செய்ததாக அதிமுக வால் அப்படி எதையும் சொல்ல முடியாது. ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு அரங்கேற்றியதுதான் அதிமுக அரசின் சாதனை. மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு 13 பேரை படுகொலை செய்தன. இந்த படுகொலை செய்த கூட்டத்துக்கு தேர்தலில் நாம் பாடம் புகட்ட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் குடும்பத்துக்கு தகுதிக்கேற்ப வேலை வழங்கப்படும். சாத்தான்குளத்தில் ஜெயராஜ் பென்னிக்ஸை சிறையிலேயே வைத்து அடித்து சித்ரவதை செய்து இந்த அரசு கொன்றுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக கோவில்பட்டி தொகுதிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ எதுவும் செய்யவில்லை. ஆனால், அவர் கொள்ளையடித்து சேர்த்த பணத்தில் புதிதாக ஒரு ஊரையே வாங்க முடியும்.

கடம்பூர் ராஜூ கொள்ளையடுத்த பணத்தில் ஒரு ஊரையே வாங்கலாம்!

திமுக ஆட்சிக்கு வந்ததும் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.8,000 வழங்கப்படும். அரசு வேலையில் பெண்களுக்கு 40 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும். காலியாக உள்ள 3,50,000 அரசு வேலைவாய்ப்புகள் தமிழக இளைஞர்களுக்கு வழங்கப்படும். இவையெல்லாம் திமுக ஆட்சி அமைந்ததும் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி அனைத்தும் நிறைவேற்றப்படும். தீப்பெட்டி மூலப்பொருட்கள் சிட்கோ மூலம் நியாய விலையில் வழங்கப்படும். அனல் மின் நிலைய தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள். உப்பளத் தொழிலாளர்கள் தனி நல வாரியம் அமைக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க: ’நான் வெற்றி பெறவேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறார்’ - அமைச்சர் ஜெயக்குமார்

Last Updated : Mar 22, 2021, 4:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.