துாத்துக்குடியில் உலக புகழ்பெற்ற துாய பனிமய மாதா ஆலயத்தின் 437ஆம் ஆண்டு திருவிழா ஜூலை 25ஆம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி, தூத்துக்குடி திருச்சிலுவை சிற்றாலயத்திலிருந்து பங்கு தந்தை குமார் ராஜா தலைமையில் மாதாவின் புகழ் கீதம் பாடி, கொடி பவனி நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் உட்பட என அனைவரும் கலந்துகொண்டனர். தூய பனிமய மாதா ஆலய திருவிழாவினை முன்னிட்டு மாதா பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தூத்துக்குடி நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.