ETV Bharat / city

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள்: இந்திய விமான நிலைய ஆணைய அலுவலர் நேரில் ஆய்வு! - தூத்துக்குடி செய்திகள்

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.380 கோடியில் நடைபெற்று வரும் விரிவாக்க பணிகளை இந்திய விமான நிலைய ஆணைய டெல்லி அலுவலர் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம் கனிமொழி எம்பி தலைமையில் நடந்தது.

விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம்
விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம்
author img

By

Published : Jan 10, 2021, 4:56 AM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் ரூ.380 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதில் 1,350 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் கொண்ட விமான ஓடுதளம், 3,115 மீட்டர் நீளம், 45 மீட்டர் அகலம் கொண்டதாக மாற்றப்படுகிறது. ஒரே நேரத்தில் 600 பயணிகள் வந்து செல்லும் வகையில் வசதியான உள்ளூர் விமான முனையமும் அமைக்கப்படுகிறது.

இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் பொறியியல் பிரிவு நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் ஜின்டால் தூத்துக்குடி வந்தார். அவர் விமான ஓடுதளம், விமானம் நிறுத்தும் இடம், பயணிகள் முனையம், சிக்னல் மையம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, விமான நிலையத்துக்கு பிரத்யேகமாக 22/33 கே.வி திறன் கொண்ட 2 மின் இணைப்பு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். விரிவாக்கப் பணியின் போது ஒழுங்குமுறை ஆணையத்த்தில் இருந்து சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதி அளித்தார்.

பின்னர் விமான நிலைய வளாகத்தில் ரூ.28 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொறியியல் பிரிவு திட்ட அலுவலகத்தை நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் ஜின்டால் திறந்து வைத்து, அந்த பகுதியில் மரக்கன்றுகளை நட்டினார்.

விமானநிலைய ஆலோசனைக் கூட்டம்?

இதனை தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம், அதன் தலைவரான தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. குழுவின் மாற்றுத் தலைவரான ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், விமான நிலைய இயக்குநர் என்.சுப்பிரமணியன் மற்றும் குழுவினர் உறுப்பினர்களான தொழில் வர்த்தக சங்கங்களை சேர்ந்தவர்கள், விமான நிறுவன அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விமான நிலைய விரிவாக்க பணிகள், விமான நிலையத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

பயணிகள் விழுக்காடு குறைவு

கடந்த 2020-ம் ஆண்டில் கரோனா ஊரடங்கு காரணமாக தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பயணிகள் வருகை 42.24 சதவீதமும், விமானங்களின் எண்ணிக்கை 37.79 சதவீதமும் குறைந்திருந்ததாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.மேலும், தூத்துக்குடியில் இருந்து கொச்சி, கோவை, மும்பை, ஹாதராபாத், டெல்லி போன்ற இடங்களுக்கு விமான சேவையை தொடங்க வேண்டியதன் அவசியம் குறித்து குழு உறுப்பினர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

கனிமொழி எம்பிக்கு பாராட்டு

தூத்துக்குடி விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்தை தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. விமான நிலைய விரிவாக்கத்துக்கு கூடுதல் நிலம் தேவை குறித்த கருத்துரு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூடுதல் ஆட்சியர் விஷ்ணுசந்திரன் தெரிவித்தார்.

வல்லநாடு மலையில் சூரியசக்தி மூலம் இயங்கும் சிக்னல் விளக்கு பொருத்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதியை பெறுவதற்கு உதவி செய்த கனிமொழி எம்பிக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நன்றி தெரிவித்தார்.

இரவு நேர விமான சேவையை தொடங்கும் போது தூத்துக்குடியில் இருந்து டெல்லி மற்றும் கொழும்புக்கு விமான சேவைகளை தொடங்க வாய்ப்பிருப்பதாக கனிமொழி எம்பி குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: வேளாளர் பொதுப்பெயரில் மாற்று சமுதாயத்தினரைச் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுவரொட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.