தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கழுகுமலை நகரப்பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் பேசிய அவர், "இந்தத் தேர்தலில் மற்ற வேட்பாளர்களைப் பற்றி நமக்கு கவலை இல்லை. அவர்கள் களத்திலேயே இல்லை. அவர்களை சந்திக்க வேண்டும் என்றால் எங்கு போய் நாம் பார்ப்பது.
அதனால் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்பு அவர்களிடம் இல்லை. அவரைக் கொண்டுவந்து ஒருவர் வலுக்கட்டாயமாக நிறுத்தி இருக்கிறார். அவர் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்கிறார். இது காமெடியாக உள்ளது" என்று அமமுக வேட்பாளரான டிடிவி தினகரனை மறைமுகமாக விமர்சித்தார்.
தொடர்ந்து கடம்பூர் ராஜு கழுகுமலை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மத்தளம் தட்டி இரட்டை இலை சின்னத்தை காண்பித்து வெற்றி நமதே என குரலெழுப்பியதில் அதிமுகவினர் உற்சாகமடைந்தனர்.