தூத்துக்குடி: செப்.2 ஆம் தேதி சிறுமி, தாயுடன் தூத்துக்குடியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த அந்த நபர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனை சிறுமியின் தாயார் கண்டித்த நிலையில் அந்த நபர், தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு பள்ளியில் படித்து வரும் தனது மகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்து வருவதாகவும்; இது குறித்து தான் காவல் நிலையத்தில் இன்று (செப்.4) புகார் அளித்துள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Video: புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அராஜகமாக நடந்துகொண்ட பாஜக எம்எல்ஏ