திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்தவர் செல்லத்துரை(42). இவர் முக்கூடல் அருகேயுள்ள அரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். பிப்ரவரி 18ஆம் தேதி இவரை அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்தார்.
இந்த சூழ்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளார் உதயநிதி ஸ்டாலின், படுகொலை செய்யப்பட்ட செல்லத்துரையின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த செல்லத்துரையின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
செல்லத்துரை திமுக இளைஞர் அணியில் மிகவும் துடிப்பாக செயல்பட்டு வந்தவர். குறிப்பாக கரோனோ ஊரடங்கு காலத்தில் கட்சியை தாண்டி பொதுமக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்தார்.