திருநெல்வேலி:School Accident: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்து சமீபத்தில் பள்ளி கட்டட விபத்தில் பலியான 3 மாணவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மூன்று மாணவர்களையும் அமைச்சர் நேரில் நலம் விசாரித்தார்.
அதைத்தொடர்ந்து நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
உயிர் இருக்கிறதா என்பதை குச்சியை வைத்து குச்சி பார்ப்பதா?
இதில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெல்லை பள்ளி கட்டட விபத்து குறித்து உருக்கமாகப் பேசினார், அப்போது அவர் பேசுகையில், 'சாஃப்டர் பள்ளியில் கழிவறை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டபோது, மாணவர்களுக்கு உயிர் இருக்கிறதா என்று ஆசிரியர்கள் குச்சியை வைத்து குத்தி குத்திப் பார்த்துள்ளனர்.
அவ்வாறு செய்த ஆசிரியர்களுக்கு மனசாட்சி இருக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் செயல்பட்டுள்ளனர். இனிமேல், இதுபோன்ற சம்பவம் நடைபெறக் கூடாது’ என்று வருத்தத்துடன் பேசினார்.
இதையும் படிங்க:நெல்லை பள்ளி விபத்து: மனித உரிமைகள் ஆணையம் விசாரணை