ETV Bharat / city

நெல்லை லாக்கப் மரண விவகாரத்தில் திடீர் திருப்பம்

author img

By

Published : Feb 5, 2022, 7:22 PM IST

திருநெல்வேலியில் திருட்டு வழக்கில் கைதான நபர் லாக்கப்பில் இறந்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லை லாக்கப் டெத் விவகாரத்தில் திடீர் திருப்பம்

திருநெல்வேலி: மேலப்பாளையத்தை சேர்ந்த சுலைமானை நேற்று (பிப்ரவரி 4) நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய காவல் துறையினர் திருட்டு வழக்கில் கைதுசெய்தனர்.

இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்திவந்த நிலையில் காவல் நிலையத்தில் வைத்து சுலைமான் உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அவரது உறவினர்கள் சார்பில் இதுவரை பெரிய அளவில் பிரச்சினை எதுவும் செய்யவில்லை.

இதனால் இந்த விவகாரத்தில் சர்ச்சை நீடித்துவந்தது. அதே சமயம் நேற்றிரவு நெல்லை கொக்கிரகுளம் அருகே தாமிரபரணி ஆற்றில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது உசேன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது கழுத்தில் வெட்டுக்காயம் இருந்ததால் அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கழுத்தறுத்து கொலைசெய்து, ஆற்றில் வீசி இருக்கலாம் என்ற சந்தேகம் காவல் துறையினருக்கு எழுந்தது. பின்னர் இது குறித்து நெல்லை சந்திப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கொலை... திருட்டு... மரணம் - திடீர் திருப்பம்

அதன்பின், இந்த இரண்டு வழக்குகளில் திடீர் திருப்பமாக காவல் நிலையத்தில் உயிரிழந்த சுலைமான்தான் முகமது உசேனை கொலைசெய்து ஆற்றில் வீசியது தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது சுலைமான், முகமது உசேன், சுலைமான் நண்பர் முருகன் ஆகிய மூவரும் சேர்ந்து மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் சுலைமான் முகமது உசேனை கொலைசெய்து ஆற்றில் வீசியதாகவும், அதன்பிறகு இருசக்கர வாகனம் ஒன்றைத் திருடிவிட்டுச் செல்லும்போது காவல் துறையினரிடம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம் காவல் துறையினர் கொலை வழக்கில்தான் தன்னை கைதுசெய்துவிட்டார்கள் என்ற அச்சத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு சுலைமான் உயிரிழந்ததாகவும் காவல் துறைத் தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்ந்து இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சட்ட விரோத தற்காலிக நியமனங்கள் மீது நடவடிக்கை தேவை - அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.