ETV Bharat / city

தேர்தல் பரப்புரை நிறைவில் காவல் துறை அணிவகுப்பு - திருநெல்வேலி

திருநெல்வேலியில் நேற்று மாலை தேர்தல் பரப்புரை நிறைவடைந்த நிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல் துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது.

காவல் துறை அணிவகுப்பு
காவல் துறை அணிவகுப்பு
author img

By

Published : Oct 8, 2021, 8:05 AM IST

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், மானூர், பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, பாப்பாக்குடி ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல்கட்டமாக நேற்று முன்தினம் (அக். 6) தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு நாளை (அக்டோபர் 9) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

956 பதவிகளுக்குத் தேர்தல்

இதையொட்டி வாக்குப்பதிவு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இரண்டாம் கட்ட தேர்தலில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 722 ஆண்கள், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 91 பெண்கள், 13 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் மூன்று லட்சத்து 25 ஆயிரத்து 826 பேர் வாக்களிக்கவுள்ளனர்.

இதற்காக மொத்தம் 567 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு, 39 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படவுள்ளன. இரண்டாம் கட்ட தேர்தலில் மாவட்ட கவுன்சிலர்கள் ஆறு பேர் உள்பட மொத்தம் 956 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது.

தீவிர வாக்குச் சேகரிப்பு

திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதையொட்டி கடந்த சில நாள்களாக வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரை நேற்று (அக். 7) மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.

இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று இரண்டாயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

இதையும் படிங்க: தேர்தல் பணி காவலர்களுக்கு நான்கு நாள்கள் விடுமுறை; காவலர்கள் மகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.