ETV Bharat / city

கனமழை எச்சரிக்கை: பல்வேறு மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை - school leave in tiruvarur

தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை, school leave,
school leave
author img

By

Published : Nov 25, 2021, 6:44 PM IST

Updated : Nov 25, 2021, 7:09 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமாகி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, திண்டுக்கல், அரியலூர், மதுரை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

Last Updated : Nov 25, 2021, 7:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.