நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் மெகா தூய்மைப் பணி இன்று நடைபெற்றது. ஆட்சியர் விஷ்ணு, காரையாறு அணை அருகே வசிக்கும் காணி பழங்குடி மக்களுடன் இணைந்து இந்த பணியினைத் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அவர், தாமிரபரணி ஆற்றில் சில தூரம் படகில் சென்று மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளைப் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் முக்கூடல் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தூய்மைப்பணி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்போது ஆட்சியர் பேசுகையில், 'பாபநாசம், மேற்குத்தொடர்ச்சி மலை; அடுத்தபடியாக முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயில் ஆகியவை இப்பகுதியில் மிக அழகாக இருக்கிறது' என்று புகழ்ந்து பேசினார்.
ஆட்சியரின் இந்த பேச்சை கேட்டவுடன், அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கைத்தட்டி விசிலடித்து அவரை பாராட்டினர். இதனால் நெகிழ்ச்சி அடைந்த ஆட்சியர், 'உங்க எனர்ஜி நல்லா இருக்கு. வெரி குட்!..' என்று பதிலுக்கு பாராட்டினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஊழல் செய்த அரசு அலுவலரின் வேலைக்கு ஆப்பு வைத்த ஆட்சியர் - பொதுமக்கள் பெரும் வரவேற்பு!