நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிங்கிகுளம் பகுதியில் வெடிகுண்டு, அரிவாளுடன் சுற்றித்திரிந்த முத்து மனோ (21), சந்திரசேகர் (22), கண்ணன் (23), மாதவன் (19) ஆகிய நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ஏழு அரிவாள்கள், ஆறு நாட்டு வெடிகுண்டுகளைக் காவலர்கள் பறிமுதல்செய்தனர். களக்காடு காவலர்கள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நாட்டு வெடிகுண்டு கலாசாரம் அதிகரித்துவரும் சூழலில் தற்போது நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சில மாதங்களுக்கு முன் நெல்லை தச்சநல்லூர் காவல் நிலையம் வாசல் முன்பு கண்ணபிரான் என்பவரைக் குறிவைத்து நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.