தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று (மார்ச்20) நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவ கிருஷ்ணமூர்த்தி அத்தொகுதியின் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்து வந்தார்.
அப்போது, திருநெல்வேலி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பால் கண்ணனின் மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் தள்ளுபடி செய்தார். இது குறித்து விசாரித்தபோது, பால் கண்ணனை முன் மொழிந்த 10 நபர்களில் இரண்டு பேரின் பெயர்களில் வித்தியாசம் இருப்பதாகவும் அதன் காரணமாகவே அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது
அதேபோல், திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட மொத்தம் 40 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 16 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 24 நபர்களின் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.