திருநெல்வேலி: சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று அவரது 251ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, நெல்லை பாளையங்கோட்டை அடுத்த மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக அமைச்சர்கள் எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், ராஜ கண்ணப்பன், மதிவேந்தன் ஆகியோர் மாலை மரியாதை செலுத்தினர்.
அதை தொடர்ந்து கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள், "திருநெல்வேலி சுதந்திர போராட்ட வீரர்கள் நிறைந்த மண். இங்கு பிறந்த வீரர்கள் எதற்கும் துணிந்தவர்களாகவும், போராட்ட களத்தில் முன்னின்று பணியாற்றியவர்களாகவும் திகழ்ந்துள்ளனர்.சுதந்திர போராட்டமாக இருந்தாலும் சரி, அரசர் காலத்தில் நடந்த போராட்டமாக இருந்தாலும் சரி வீரர்களுக்கு உரிய மரியாதை வழங்குவதில் கருணாநிதி வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தன்னை தானே திருமணம் செய்து கொண்ட நடிகை...