திருநெல்வேலி: நெல்லை டவுன் சாஃப்டர் அரசு உதவிபெறும் பள்ளியில் கழிவறைச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் பலியாகினர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பத்தினருக்குப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (டிசம்பர் 23) நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
அப்போது மாணவர்களின் குடும்பத்தினரிடம் இது உங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு, ஆறுதல் கூற முடியாத இழப்பு என்று தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட சாஃப்டர் பள்ளிக்கும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார். குறிப்பாக விபத்து நடைபெற்ற கழிவறை கட்டடம், பள்ளியின் பிற கட்டடங்களை நேரில் ஆய்வுசெய்தார்.
தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இதையும் படிங்க: சண்முகநாதனின் கடைசி ஆசை - கண்கலங்கிய ஸ்டாலின்