ETV Bharat / city

கூடங்குளம் 2ஆவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்... மின்வெட்டுக்கு வாய்ப்பா...? - kudankulam nuclear power plant impact factor

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

kudankulam-second-reactor-stopped-for-annual-fuel-outage

author img

By

Published : Mar 25, 2022, 1:27 PM IST

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அணுமின் நிலைய நிர்வாகம் தரப்பில், இரண்டாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிக்காக இன்று காலை 7 மணி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த எரிபொருள் நிரப்பும் பணியானது 55 நாட்கள் நடைபெறும். அதுவரை முதலாவது அணு உலையில் மட்டும் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அணு உலைகள் மூலம் தமிழ்நாட்டிற்கு 925 மெகா வாட் மின்சாரம் வழங்கப்படும் நிலையில் ஒரு அணு உலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது மின்வெட்டு ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம்

திருநெல்வேலியில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமான பணிகள் ரஷ்யா நாட்டின் உதவியுடன் 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. முதலில் தலா 1000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டன. முதல் அணு உலையில் 2013ஆம் ஆண்டு 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

இதையடுத்து 2014 முழு உற்பத்தித் திறனுடன் 1000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இரண்டாம் உலையில் 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1000 மெகா வாட் உற்பத்தி தொடங்கியது.

கூடங்குளம் அணுமின் நிலையம்

இதனைத்தொடர்ந்து 3, 4ஆவது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, முடிவடைந்துள்ளன. இறுதி கட்ட பணிகள் முடிந்தவுடன் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே ரூ.49,625 கோடி மதிப்பீட்டில் 5, 6ஆவது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதிலிருந்து 2027ஆம் ஆண்டு மின் உற்பத்தியை தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் அணுக்கழிவுகள் அதிகளவில் வெளியாக வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: கூடங்குளம் - அணுக்கழிவுகளை சேமிக்க எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.