ETV Bharat / city

கூடங்குளம் அணு உலை: பழுது சீரமைக்கப்பட்டு மின் உற்பத்தி தொடக்கம் - கூடங்குளம் போராட்டம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலை, எரிபொருள் நிரப்பவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று இந்த அணு உலையில் 300 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

கூடங்குளம் அணு உலை
கூடங்குளம் அணு உலை
author img

By

Published : Sep 2, 2021, 5:33 PM IST

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலையின் எரிபொருள் மாற்றும் பணி, வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த ஜூன் 22ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது.

இந்தப் பணிகள் முடிந்து 70 நாள்களுக்கு பின்னர், முதல் அலகில் மின் உற்பத்தி தற்போது தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி அதில் 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இரண்டாம் அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பழுதுகளோடு நகரும் அணு உலை

உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அணு உலைகள், அணு ஆராய்ச்சி, அணு உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை கண்காணித்து வரும் அமைப்பு உலக அணுசக்தி தொழில் அமைப்பு (WNISR) 2019ஆம் ஆண்டுக்கான அறிக்கை வெளியிட்டது.

அதில், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையம் முறையாக செயல்படவில்லை என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தது. கூடங்குளத்தில் அமைக்கப்பட்ட இரண்டு அணு உலைகளின் செயல்பாடும் மிகவும் மோசமாக உள்ளதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

"முதல் அலகின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனில் 54 விழுக்காடு மட்டுமே மின் உற்பத்தி செய்கிறது. இரண்டாவது அலகின் ஒட்டுமொத்த மின்னுற்பத்தி திறனில் 35.2 விழுக்காடு மட்டுமே மின் உற்பத்தி செய்கிறது. அதுமட்டுமல்லாது, கூடங்குளத்தில் 2 அலகுகள் உள்ளபோதும் பல நேரங்களில் ஒரு உலையில் மட்டுமே மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் கூடங்குளம் அணு உலையில், மின் உற்பத்தி மேலும் குறையக்கூடும் எனவும் உலக அணுசக்தி தொழில் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆலையில் மாற்று சக்தியை கொண்டு மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என அந்த அமைப்பு அறிவுரை வழங்கியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.