ETV Bharat / city

'அணுக்கழிவு மையம்; மக்களிடம் கருத்தைக் கேளுங்கள்!'

திருநெல்வேலி: கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு, அதில் பாதிக்கப்படும் மக்களிடம்தான் கருத்துக் கேட்க வேண்டுமே தவிர, எங்கோ சென்று கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தக்கூடாது என அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் எச்சரித்துள்ளது.

கூடங்குளம்
author img

By

Published : Jun 11, 2019, 9:48 AM IST

Updated : Jun 11, 2019, 10:31 AM IST

கூடங்குளத்தில் அணுஉலை கழிவு கிட்டங்கி அமைப்பதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் குறித்த எச்சரிக்கை அறிக்கையை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ளது. அதில், ‘கூடங்குளம் அணுஉலையில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்குக் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதென்றால், நேரடி பாதிப்புக்குள்ளாகும் மக்களிடம்தானே கருத்துக் கேட்க வேண்டும்? கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி போன்ற கிராமங்களில் அதை நடத்தினால்தானே அர்த்தமுள்ளதாக இருக்கும்?

  • இந்தியாவிலுள்ள அணுஉலைகள் அனைத்திலிருந்தும் வெளிவரும் கழிவுகளை நிரந்தரமாகப் புதைக்கும் 'ஆழ்நிலக் கருவூலம்' (Deep Geological Repository) ஒன்றை முதலில் அமையுங்கள். அதன்பிறகு, கூடங்குளம் அணுஉலை வளாகத்தில் 'தற்காலிக அணுக்கழிவு மையம்' (Away From Reactor) அமைப்பை நிறுவுவது பற்றிக் கவலைப்படலாம்.
  • இனி நடக்கவிருக்கும் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் அனைத்திலும் திட்டப்பகுதியிலுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொள்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். இதனைச் சட்டமாக இயற்றுங்கள். திமுக தலைவர் அவரது கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு வாய்மொழி மூலமாகவும், எழுத்து மூலமாகவும் கருத்துத் தெரிவிப்பார்கள் என்று அறிவித்திருப்பது ஒரு நல்ல முன்னேற்றம். எல்லாக் கட்சிகளும் இதைச் செய்ய முன்வர வேண்டும்.
  • இனிவரும் காலங்களில் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் பன்னாட்டுப் பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும். அந்தக் கூட்டம் முழுவதுமாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட வேண்டும். பெரும்பான்மை மக்கள் முடிவே இறுதி முடிவாக இருக்க வேண்டும்.

உள்நாட்டு முதலாளிகளுக்காக, அயல்நாட்டு பெரு நிறுவனங்களுக்காக, கைக்கூலி அரசியல்வாதிகளுக்காக எங்களை எங்கள் மண்ணிலேயே அகதிகள் ஆக்குவதற்கு நாங்கள் இனிமேலும் அனுமதிக்க மாட்டோம்’ எனக் கூறப்பட்டிருந்தது.

Intro:கூடங்குளம் அணுஉலையில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு கருத்துக்கேட்புக் கூட்டம் Body:கருத்துக்கேட்புக் கூட்டம்

கூடங்குளம் அணுஉலையில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்துவதென்றால், நேரடி பாதிப்புக்குள்ளாகும் மக்களிடம்தானே கருத்துக் கேட்க வேண்டும்? கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி போன்றக் கிராமங்களில் அதை நடத்தினால்தானே அர்த்தமுள்ளதாக இருக்கும்?

பத்து கி.மீ. தூரத்திலுள்ள இராதாபுரத்தில் நடத்துவோம் என்று அறிவித்து, அந்த இடமும் பாதுகாப்பானதல்ல எனக் கொண்டு வேறு இடம் தேடுகிறார்களாம். தில்லியில் நடத்துங்களேன்! மிகவும் பாதுகாப்பான இடமாக இருக்குமே?

தூரமான இடத்தில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தினால் மக்கள் வந்து செல்வதற்கு பயணப்படி, உணவுப் படி போன்றவை தருவீர்களா? அன்றாடம் காய்ச்சிகளான எங்கள் மக்களுக்கு ஒருநாள் ஊதிய இழப்பு ஏற்படுகிறதே, அதை மக்களுக்குத் தருவீர்களா? அரசு அதிகாரிகளுக்கு எல்லாப் படிகளும், சம்பளமும், கிம்பளமும் கொடுக்கிறீர்களே?

கூடங்குளம் 3, 4, 5, 6 அணுஉலைகளுக்காக 2007-ஆம் ஆண்டு திருநெல்வேலி அரசுப் பொறியியற் கல்லூரியில் வைத்து ஒரு கருத்துக்கேட்பு நாடகம் நடத்தினார்கள். நானும் அதில் பங்கேற்றேன். அதில் பங்கேற்ற 99.9 விழுக்காடு மக்கள் இந்த விரிவாக்கத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தோம். ஆனால் அப்போதைய மாவட்ட ஆட்சியர் கோவிந்தராசு என்பவர் "மக்கள் கேள்விகள் கேட்டார்கள், அதிகாரிகள் அற்புதமாக பதில் சொன்னார்கள், எல்லாம் சுபமாக முடிந்தது, திட்டத்திற்கு அனுமதி கொடுக்கலாம்" என்று ஒரு மக்கள் விரோத அறிக்கை தயாரித்து அனுப்பினார். திட்டமிட்ட மோசடி அது. பெரும் ஏமாற்று வேலை! இன்னொரு முறை ஏமாற நாங்கள் தயாராக இல்லை.

[1] இந்தியாவிலுள்ள அணுஉலைகள் அனைத்திலிருந்தும் வெளிவரும் கழிவுகளை நிரந்தரமாகப் புதைக்கும் 'ஆழ்நிலக் கருவூலம்' (Deep Geological Repository) ஒன்றை முதலில் அமையுங்கள். அதன்பிறகு, கூடங்குளம் அணுஉலை வளாகத்தில் 'அணுஉலைக்கு அகலே' (Away From Reactor) அமைப்பை நிறுவுவது பற்றி கவலைப்படலாம்.

[2] இனி நடக்கவிருக்கும் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் அனைத்திலும் திட்டப்பகுதியிலுள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொள்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். இதனைச் சட்டமாக இயற்றுங்கள். தி.மு.க. தலைவர் அவரது கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு வாய்மொழி மூலமாகவும், எழுத்து மூலமாகவும் கருத்துத் தெரிவிப்பார்கள் என்று அறிவித்திருப்பது ஒரு நல்ல முன்னேற்றம். எல்லாக் கட்சிகளும் இதைச் செய்ய முன்வர வேண்டும்.

[3] இனிவரும் காலங்களில் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் பன்னாட்டுப் பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும். அந்தக் கூட்டம் முழுவதுமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும். பெரும்பான்மை மக்கள் முடிவே இறுதி முடிவாக இருக்க வேண்டும்.

உள்நாட்டு முதலாளிகளுக்காக, அயல்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, கைக்கூலி அரசியல்வாதிகளுக்காக எங்களை எங்கள் மண்ணிலேயே அகதிகள் ஆக்குவதற்கு நாங்கள் இனிமேலும் அனுமதிக்க மாட்டோம்.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்,
யூன் 10, 2019.Conclusion:அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்,
யூன் 10, 2019.
Last Updated : Jun 11, 2019, 10:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.