மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதில் நேற்று இரவு விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். வெகு நாட்களாக தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்த குற்றாலத்தில், தற்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.