ETV Bharat / city

தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கைகளுக்கு குறைதீர் கூட்டம் - தமிழ்நாட்டிலையே முதல் முறையாக திருநங்கைகளுக்கு குறைதீர் கூட்டம்

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக நெல்லை மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு மூன்று மாதத்துக்கு ஒருமுறை குறைதீர் கூட்டம் மே மாதம் முதல் நடைபெறவுள்ளது.

திருநங்கைகளுக்கு குறைதீர் கூட்டம்
திருநங்கைகளுக்கு குறைதீர் கூட்டம்
author img

By

Published : Mar 31, 2022, 8:04 PM IST

Updated : Apr 1, 2022, 7:30 AM IST

திருநெல்வேலி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருநங்கைகளுக்கான வங்கி உதவித்தொகை, அரசு பதிவிதழில் பெயர் மாற்றம், மருத்துவ காப்பீடு திட்டம், மானியத்துடன் கூடிய தொழில் கடன் உள்ளிட்டவைகள் 70 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

இனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறுகையில், "திருநங்கைகளுக்கு நீண்ட கால திட்டம் செயல்படுத்தப் படுவதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும் என திட்டமிட்டு உலக திருநங்கையர் தினத்தில் அவர்களுக்கான பரிசாக 4 வகையான முயற்சிகள் எடுக்கபட்டுள்ளன.

இப்போது மக்கள் குறைதீர் கூட்டம் மீனவர்கள் குறைதீர் கூட்டம், ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் போல நெல்லை மாவட்டத்தில் திருநங்கைகள் குறைதீர் கூட்டம் 3 மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மே மாதம் முதல் நடைபெறவுள்ளது.

அந்தக் கூட்டத்தில் காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று திருநங்கைகளுக்கான கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்து தீர்வுகான நடவடிக்கை எடுக்கப்படும்.

சைந்தவி பேட்டி

மேலும் படித்த திருநங்கைகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் போட்டி தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி மையம் மே மாதம் முதல் தொடங்கி அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். திருநங்கைகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும்.

திருநங்கைகளுக்கு குறைதீர் கூட்டம்

உயர்கல்வி படிக்கும் திருநங்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார். இந்த திட்டங்களை மாவட்ட ஆட்சியர் அறிவித்ததற்கு திருநங்கைகள் கைதட்டி கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பாலியல் தொந்தரவு.. மயில் ரத்தம்.. சாமியார் மீது பெண் பரபரப்பு புகார்!

Last Updated : Apr 1, 2022, 7:30 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.