திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன்(76). அவருக்கு கார்த்திகேயன், கண்ணன் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், 2014ஆம் ஆண்டு குருநாதன், கார்த்திகேயனை கொலை செய்தார்.
அதற்கு, தாய் பச்சைமாளும், சகோதரர் கண்ணன் இருவரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனடிப்படையில், மூவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இதற்கிடையில், பச்சைமாள், கண்ணன் இருவரும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தனர். இந்தச் சூழலில், இன்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரவிசங்கர், குருநாதனுக்கு ஆயுள் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: பக்கத்து வீட்டார் கொலை மிரட்டல் விடுப்பதாக கண்ணீர் மல்க மூதாட்டி புகார்!