ETV Bharat / city

பாளையங்கோட்டையில் 6ஆவது முறை வெற்றி வாகை சூடிய திமுக

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் தொடர்ந்து ஆறாவது முறையாக திமுக வெற்றி வாகை சூடியுள்ளது.

author img

By

Published : May 2, 2021, 10:37 PM IST

Dmk
Dmk

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக தொடர்ந்து ஆறாவது முறையாக வெற்றி வாகை சூடியுள்ளது.

அதாவது பாளையங்கோட்டை தொகுதியில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என சிறுபான்மையினர் அதிகம் வசிக்கின்றனர். இங்கு 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது திமுக கூட்டணியில் இந்தியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் முகமது கோதர் மைதீன் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

அதன்பிறகு 2001 முதல் 2016 வரை நான்கு முறை தொடர்ச்சியாக திமுக வேட்பாளர் மைதீன்கான் பாளையங்கோட்டையில் வெற்றிபெற்றார். இந்தச் சூழ்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட அப்துல் வகாப் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெரால்டைவிட 49,141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார் .

இதன்மூலம் பாளையங்கோட்டை தொகுதியில் திமுக தொடர்ச்சியாக ஆறாவது முறையாக வெற்றிபெற்றுள்ளது. திமுக கோட்டையாக விளங்கிவரும் பாளையங்கோட்டையில் இந்த முறை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார் .

எஸ்டிபிஐ கட்சிக்கு பாளையங்கோட்டை தொகுதியில் ஓரளவு செல்வாக்கு இருப்பதாலும் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவதாலும் முபாரக் அதிக வாக்குகளைப் பிரித்து அதன் மூலம் அதிமுக வேட்பாளர் ஜெரால்டு வெற்றிபெறுவார் என்று பேசப்பட்டது.

இருப்பினும் அந்தக் கருத்துகளை உடைத்தெறிந்து பாளையங்கோட்டை எங்கள் கோட்டை என்பதை திமுக மீண்டும் நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.