திருநெல்வேலி: வள்ளியூரை சேர்ந்தவர் செந்தில் முருகன் (54). இவர் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தார்.
நேற்று (ஏப்.24) இரவு வள்ளியூர் புறவழி சாலையை கடக்கும் பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே காவலர் செந்தில் முருகன் உயிரிழந்தார்.
இது குறித்து வள்ளியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கத்தியை காட்டி மிரட்டி காதில் அணிந்திருந்த தங்கக் கம்மலை பறித்த கும்பல் - ஒருவர் கைது