தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தென் மாவட்டங்களிலேயே ஆட்டுச்சந்தைக்கு புகழ்பெற்றது. வாரத்தில் செவ்வாய், சனி என இரண்டு நாள்களில் அங்கு ஆடு வியாபாரம் களைகட்டும்.
இந்த சந்தைக்கு தேனி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக ஆடுகள் கொண்டுவரப்படும். மேலும் ஆடுகளை வாங்குவதற்கும் பல்வேறு ஊர்களிலிருந்தும் வியாபாரிகள், விவசாயிகள் வருகைதருவர்.
தற்போது தொடர் மழை காரணமாக சந்தைக்கு ஆடுகள் வரத்தும் குறைந்துள்ளன. வியாபாரிகளும் வருகை தரவில்லை. சாதாரணமாக குறைந்தது 2000 ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். இந்தச் சந்தையில் இன்று 200 முதல் 300 ஆடுகள் மட்டுமே வந்தன. இதனால் இன்று வந்த வியாபாரிகளும் விற்பனையாளர்களும் பெருத்த ஏமாற்றத்துடன் சென்றனர்.