ETV Bharat / city

பாரதியார் நூற்றாண்டு நினைவு நாள் முத்திரையை வெளியிட்ட பாஜக தலைவர்கள்

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாள் முத்திரையை திருநெல்வேலி சந்திப்பில் பாரதியார் பயின்ற பள்ளியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வெளியிட்டனர்.

பாரதியார் நூற்றாண்டு நினைவு தின முத்திரை, MDT HINDU HR SEC SCHOOL, mdt school tirunelveli, mdt school, mdt, bharathiyar school
பாரதியார் நூற்றாண்டு நினைவு தின முத்திரையை வெளியிட்ட பாஜக தலைவர்கள்
author img

By

Published : Aug 21, 2021, 6:33 AM IST

திருநெல்வேலி: மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாள் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்வாக திருநெல்வேலி சந்திப்பில் அமைந்துள்ள பாரதியார் படித்த பள்ளியான மதிதா இந்து மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு நினைவு நாளை, ஒரு மாத காலமாக அனுசரிக்க முடிவுசெய்துள்ளனர்.

இதனால், நாள்தோறும் காணொலிக் காட்சி வாயிலாக கருத்தரங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் மதிதா மேல்நிலைப் பள்ளிக்கு நேற்று (ஆக. 20) வருகைதந்தனர்.

வகுப்பறையில் புகைப்படம்

பின்னர், பாரதியார் பயின்ற வகுப்பறையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வ.உ. சிதம்பரனார், பாரதியார் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதையடுத்து, பாரதியார் வகுப்பறையில் அமர்ந்து படித்த மேசையில், அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பாரதியார் நூற்றாண்டு நினைவு நாள் முத்திரையை வெளியிட்ட பாஜக தலைவர்கள்

இதன்பின்னர், பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாள் முத்திரையை அமைச்சர் எல். முருகன், அண்ணாமலை ஆகியோர் வெளியிட பள்ளியின் கல்வி சங்க உறுப்பினர்கள் அதனைப் பெற்றுக் கொண்டனர்.

ஒண்டிவீரன் சிலைக்கு மரியாதை

முன்னதாக, சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 250ஆவது நினைவு நாளை முன்னிட்டு பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு எல். முருகன், அண்ணாமலை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திமுகவின் ஆட்சி கொஞ்சம் இனிப்பு அதிக கசப்பு - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.