நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் மாநகர் பகுதி முழுவதும் சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. அதேபோல் தாமிரபரணி ஆற்றிலும் நேற்று முதல் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கொக்கிரக்குளம் பகுதியில் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு வெள்ளம் ஓடுகிறது.
இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குறுக்குத்துறை முருகன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக கோயிலில் உள்ள உற்சவர் சிலையை வெளியே எடுத்து சென்று மேல் பகுதியில் உள்ள மற்றொரு கோவிலில் பாதுகாப்பாக வைத்தனர்.
இதையும் படிங்க: காவிரியில் இரு சிறுவர்கள் மாயம்; உதவி பேராசிரியர் உள்பட 2 பேர் சடலமாக மீட்பு!