திருநெல்வேலி: டவுன் வழியாக சென்ற அரசு புறநகர் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர் ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். சக பயணிகள் மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அந்த மாணவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் ஸ்ரீகாந்த் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாணவர் படிக்கட்டில் தொங்கியபோது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார் என தெரிகிறது. இந்த நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சஞ்சய் ராவத்துக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவல்!