நெல்லை: பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே கேரளாவைச் சேர்ந்த இஷாப் என்ற தனியார் நகைக்கடன் வங்கி (Esaf) செயல்பட்டு வருகிறது. இதில் தியாகராஜநகரைச் சேர்ந்த திருநாவுக்கரசு (38) என்பவர் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். அதே வங்கியில் அவரது மைத்துனர் செந்தில் ஆறுமுகம் (27) என்பவர் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார்.
இதனிடையே அந்த தனியார் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து வருடாந்திர ஆய்வு செய்ததில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.69 லட்சத்திற்கு இருவரும் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த வங்கி நிர்வாகம் சார்பில் நெல்லை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகையை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட மேலாளர் திருநாவுக்கரசு மற்றும் அவரது மைத்துனர் செந்தில் ஆறுமுகம் ஆகியோரை இன்று (ஆக.2) கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேர் தலைமறைவாக உள்ளதால் அவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து சினிமா தயாரிப்பாளர்களுக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு - பரபரப்பில் திரைத்துறை!