ஏற்காட்டை சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் தொடர் மழை பெய்துவருவதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் ஏற்காடு ஏரி நிரம்பியது. இதுதவிர ஏற்காடு மலையில் நேற்றிரவு 42 மி.மீ மழை பெய்திருந்தது.
இதனால் ஏற்காடு மலைப்பாதையில் இன்று 10-க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் அருவிகள் உருவாகியுள்ளன. இந்த அருவிகளை சுற்றுலா பயணிகள் பலரும் வேடிக்கை பார்க்க திரண்டு வருகிறார்கள். பலர் செல்ஃபியும் எடுத்துக்கொள்கிறார்கள். இந்த அருவிகளில் அதிக மழை பெய்யும்போது குற்றால அருவி போல் தண்ணீர் கொட்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.