சேலம் மாவட்டம் மூன்று ரோடு பகுதியில் வீரபாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மனோன்மணியின் இல்லத் திருமண விழாவானது அங்குள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, மணமக்கள் ஜெயதேவ்-பவதாரணி ஆகிய இருவரையும் மலர் தூவி ஆசிர்வதித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதேபோல் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, சேலம் அதிமுக நிர்வாகிகள், அரசு உயர் அலுவலர்கள் பலரும் மணமக்களை நேரில் வாழ்த்தினர். திருமண விழாவில் அதிமுக பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வள்ளலார் கோயில் குளத்தில் கலக்கும் கழிவு நீர் - பக்தர்கள் அதிருப்தி!