ETV Bharat / city

'சீமானைக் கைது செய்க'

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தகவல் அறியும் உரிமை சட்டப்பிரிவு மாநிலத் தலைவர் கனகராஜ் தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
author img

By

Published : Oct 10, 2021, 11:05 PM IST

சேலம்: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தகவல் அறியும் உரிமை சட்டப்பிரிவு மாநிலத்தலைவர் கனகராஜ் தெரிவித்தார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

"நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மூன்று தினங்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் பேசுகையில் நாவடக்கம் இல்லாமல் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் சோனியா காந்தியின் வீட்டுப் பிள்ளைகள் என்று மிகவும் கொச்சையாக கூறியுள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

சீமான் தமிழ் நாட்டை ஆளுகின்ற ஆளுமையாக என்றுமே ஆக முடியாது. நாட்டை வழிநடத்துகின்ற நிலைக்கு என்றும் சீமான் வரமாட்டார். சீமானின் இந்த பேச்சுக்கு எதிர்ப்புத்தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்.

மேலும், சீமானை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். அவர் மீண்டும் சிறைக்குச் செல்ல நேரிடும். எனவே, ஒரு வார காலத்திற்குள் சீமான் மன்னிப்புக்கேட்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டம் மிக எழுச்சியாக அவருக்கு எதிராக நடத்தப்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க:ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம்; முதலமைச்சர் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.