சேலம்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை வீட்டின் திருமண விழாவில் இன்று (டிசம்பர் 2) கலந்துகொண்டார். அப்போது செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய அவர், "புதிய வகை ஒமைக்ரான் கரோனா உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது.
அதனால் மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கரோனா வைரஸ் வகையில் மாறுபட்டாலும் பாதுகாப்பு வழிமுறைகள் ஒன்றுதான் என்பதை மக்கள் அனைவரும் புரிந்துகொண்டு வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கார் விபத்து