சென்னை : கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, சேலத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு முருகேசன் என்பவர் உயிரிழந்த சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ️உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காவல்துறையினர் வாகன தணிக்கையின் போது முருகேசன் மதுபோதையில் இருந்ததாகவும், காவல்துறையினரை தகாத வார்தைகள் பேசியதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் அவரை தாக்கியதில் முருகேசன் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
பின்னர் மேல் சிகிச்சையில் இருக்கும் நிலையில் முருகேசன் உயிரிழந்ததாக விளக்கம் அளித்தார். இதுதொடர்பான தகவல் கிடைத்தவுடன் உடனடியாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும், ️தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க : மின்வெட்டு ஏன்? முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் : எல். முருகன்